Kogilavani / 2015 செப்டெம்பர் 03 , மு.ப. 04:41 - 0 - {{hitsCtrl.values.hits}}
-மொரிஸ் என்டனி
இரத்தினபுரி, இறம்புக்கந்தை தோட்டத்தில் கடந்த சனிக்கிழமை, தோட்ட உத்தியோகத்தர் தாக்கப்பட்ட சம்பவத்துக்கு நீதிக்கோரி, தொழில் காரியாலயத்தில் இடம்பெற்ற பேச்சுவார்த்தை தோல்வியடைந்துள்ளதாக தெரியவருகின்றது.
இச்சம்பவம் தொடர்பிலான பேச்சுவார்த்தை தொழிலாளர் பிரதிநிதிகள், தொழிற் சங்கப் பிரதிநிதிகள் மற்றும் தோட்ட நிர்வாகத்தினர் ஆகியோருக்கிடையில் நேற்று(02) நடைபெற்றது.
இதன்போது தோட்ட தொழிலாளர்களுடைய கோரிக்கையை தோட்ட நிர்வாகம் ஏற்க மறுத்ததையடுத்து, பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்ததாக இலங்கைத் தேசிய தோட்டத் தொழிலாளர் சங்க தொழில் உறவு அதிகாரி வி.கந்தையா தெரிவித்தார்.
இதுதொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
இறம்புக்கந்தை தோட்டத்தில் கடமையாற்றி வந்த பதுளையைச் சேர்ந்த ப.யோகேஷ்வரன் என்பவரை, அதே தோட்டத்தைச் சேர்ந்த சில உத்தியோகத்தர்கள்; கடந்த சனிக்கிழமை தாக்கியுள்ளதுடன் அவரை குடியிறுப்பிலிருந்து வெளியேற்றியுள்ளனர்.
இதேவேளை, அவரிடமிருந்து பலவந்தமாக சில ஆவணங்களில் கையொப்பத்தை பெற்றுள்ளனர்.
மேலும், சுயவிருப்பின்படி தான் தொழிலிலிருந்து விலகிச் செல்வதாக கடிதம் எழுதி, அதில் கையொப்பம் இடுமாறு வலியுறுத்தியுள்ளனர்.
இச்சம்பவத்தில் பாதிக்கப்பட்ட தோட்ட உத்தியோகத்தர், தொழிற்சங்கத்திலும் இரத்தினபுரி பொலிஸ் நிலையத்திலும் முறைப்பாடு செய்துவிட்டு பிரதேசத்தை விட்டு வெளியேறியுள்ளார்.
மேற்படி உத்தியோகத்தரை தாக்கிய பெரும்பான்மையின உத்தியோகத்தர்களை தோட்டத்திலிருந்து இடமாற்றுமாறு கோரியும், தாக்குதலுக்குள்ளானவரை மீண்டும் தோட்டச் சேவையில் இணைத்துக்கொள்ளுமாறும் கோரி, தொழிலாளர்கள் நேற்று முன்தினம் (01) வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது
4 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
5 hours ago