2025 ஓகஸ்ட் 14, வியாழக்கிழமை

புத்தாண்டில் மாமிசங்களின் விலை அதிகரிப்பு

Princiya Dixci   / 2017 ஏப்ரல் 12 , மு.ப. 11:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

மு.இராமச்சந்திரன்

ஹட்டன் நகர் உட்பட மலையகத்தின் பல்வேறு பகுதிகளிலும், மாமிசங்களுக்கான விலை அதிகரித்துள்ளமையையிட்டு, பொதுமக்கள் விசனம் தெரிவித்தனர்.

450 ரூபாய்க்கு விற்பனை செய்த உரித்த கோழியிறைச்சி, 150 ரூபாயினால் அதிகரித்தும், 600 ரூபாய்க்கு விற்பனை செய்த மீன் ஒரு கிலோகிராம் 100 ரூபாயினால் அதிகரித்தும் விற்பனை செய்யப்படுவதுடன், 1,200 ரூபாய்க்கு விற்பனை செய்த  இறால் ஒரு கிலோ கிராம், 700 ரூபாயினால் அதிகரித்தும் விற்பனை செய்யப்படுகின்றது.

இந்த விலை உயர்வு தொடர்பில்,  சில்லறை வியாபாரிகள் கருத்துத் தெரிவிக்கையில், “அரசங்கத்தினால் நிர்ணய விலை கொண்டுவரப்பட்டதன் பின்னர், சிறியளவிலான பண்ணைகளை நடத்தி வந்தவர்கள், பண்ணைகளை நடத்தமுடியாது மூடிவிட்டனர். தற்போது ஒரு சில பண்ணைகளே இயங்கிவருகின்றமையினால், போதியளவு கோழியிறைச்சிகளைப் பெற்றுக்கொள்ள முடியாதுள்ளது” என்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .