Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை
Kogilavani / 2015 ஒக்டோபர் 21 , மு.ப. 11:46 - 0 - {{hitsCtrl.values.hits}}
-க.ஆ.கோகிலவாணி
கண்டி மாவட்டம் பாத்த ஹேவாஹெட்ட தேர்தல் தொகுதிக்கு உட்பட்ட 9 பாதைகளை மத்திய மாகாணசபை நிர்வாகத்தின் கீழ் கொண்டுவந்து அவற்றை அபிவிருத்தி செய்வதற்கான பிரேரணை ஏகமனதாக நிறைவேற்றப்பட்டதாக மத்திய மாகாண சபை முதல்வர் துரை மதியுகராஜா தெரிவித்தார்.
இதுதொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,
மத்திய மாகாணசபையின் மாதாந்த அமர்வு, கண்டி, பல்லேகலையில் அமைந்துள்ள மாகாண சபையின் கேட்போர் கூடத்தில் செவ்வாய்க்கிழமை(20) நடைபெற்றது.
இதன்போது மத்திய மாகாண சபை உறுப்பினர் காமினி விஜய பண்டாரவினால் மேற்படி பிரேரணை முன்வைக்கப்பட்டு ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.
முதுனுகடை- சகம பாதை, தலாத்துஓய - பின்னவல பாதை, அம்பிட்டிய - தம்பவெல பாதை, நிக்கதென்ன - ஹாரகம பாதை, தலாத்துஓயா - குருதெனிய பாதை, அங்கெலிப்பிட்டிய சந்தியிலிருந்து லோக்குலுவ சந்தி வரையிலான மடித்த பாதை, ஹங்குராங்கெத்த பழைய பாதையில் குருதெனிய செங்கல் பாலம் போன்றவற்றையே மத்திய மாகாணசபையின் நிர்வாகத்தின் கீழ்கொண்டு வந்து அபிவிருத்தி செய்வதற்கான பிரேரணை முன்வைக்கப்பட்டது.
இதேவேளை, மத்திய மாகாண சபை உறுப்பினர் சன்ன கலப்பதிகேவினால் முன்வைக்கப்பட்ட பிரேரணையும் இதன்போது ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது' என்றார்.
மேலும் மத்திய மாகாணசபையின் அமர்வு எதிர்வரும் 3 ஆம் திகதிக்கு ஒத்திவைத்துள்ளதாகவும் அவர் கூறினார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
53 minute ago
3 hours ago
8 hours ago
9 hours ago