Sudharshini / 2015 ஒக்டோபர் 19 , மு.ப. 09:20 - 0 - {{hitsCtrl.values.hits}}
ரஞ்சித் ராஜபக்ஷ
புதிய அரசாங்கத்தினால் பெருந்தோட்ட, சிறுதோட்ட தொழிலாளர்கள் பாதுகாக்கப்படுவார்கள்;. இதற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோர் ஊடாக பல்வேறு முன்னெடுப்புகளை மேற்கொண்டு வருவதாக பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் நவீன் திஸாநாயக்க தெரிவித்தார்.
ஹட்டன் நகரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும்பேதே அவர் இதனை கூறினார். 'இன்று உலக சந்தையில் தேயிலையின் விலை வீழ்ச்சி அடைந்துள்ள நிலையில், மலையக பெருந்தோட்ட மற்றும் சிறு தோட்ட தொழிலாளர்கள் பல்வேறு இன்னல்களுக்கு முகங்கொடுத்து வருகின்றனர்.
மலையக மக்களின் இன்னலை நிவர்த்தி செய்யயுமாறு பிரதமரிடமும் ஜனாதிபதியிடமும் கோரிக்கைகளை முன்வைக்கவுள்ளேன். இதற்கிணங்க வெகுவிரைவில் இம்மக்களின் நலன்களை காப்பதற்கு, அயராத சேவையை நான் முன்னெடுப்பேன்' என்றும் அவர் கூறினார்.
22 minute ago
30 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
22 minute ago
30 minute ago
2 hours ago