Kogilavani / 2016 ஜூன் 13 , மு.ப. 05:18 - 0 - {{hitsCtrl.values.hits}}

மு.இராமச்சந்திரன்
மண்சரிவு அபாயத்தை எதிர்கொண்டுள்ள கொட்டக்கலை, மேபீல்ட் தோட்டங்களைச் சேர்ந்த 16 குடும்பங்களுக்கு, புதிய வீடுகளை அமைத்துக்கொடுப்பதற்கான இடம்தெரிவு செய்யப்பட்டுள்ளதாகவும் கட்டட ஆய்வு மையத்தின் அனுமதியைத் தொடர்ந்து எதிர்வரும் 17ஆம் திகதி, வீடுகளுக்கான அடிக்கல் நாட்டப்படும் எனவும் மத்திய மாகாண சபை உறுப்பினர் எஸ்.ஸ்ரீதரன் தெரிவித்தார்.
மண்சரிவு அபாயம் காரணமாக மேற்படி தோட்டத்தைச் சேர்ந்த 16 குடும்பங்கள், தமது குடியிருப்புகளிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளதுடன் இவர்கள் சிறுவர் பராமரிப்பு நிலையத்தில் தங்கவைக்கப்பட்டதுடன் தற்போது தத்தம் குடியிருப்புகளுக்கே திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.
இவர்களை மீள்குடியேற்றுவதற்காக தோட்ட நிர்வாகமானது, குடியிருப்புகள் அமைந்துள்ள பகுதிகளுக்கு அப்பால், இரண்டு கிலோ மீட்டர் தொலைவில் காணியை ஒதுக்கி தந்துள்ளது. எனினும் மேற்படி காணியானது மேடாக காணப்படுவதாலும் இப்பகுதியில் 5 தடவைகள் நீரிடிவிழுந்ததன் காரணாமகவும் தோட்ட மக்கள் அப்பகுதியில் குடியேற மறுத்தனர். போக்குவரத்து வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளும் இதற்கு காரணமாகும் என அவர்கள் கூறினர்.
அமைச்சர் ப.திகாம்பரத்தின் பணிப்புரைக்கு அமைய மேற்பகுதிக்கு ஞாயிற்றுக்கிழமை(12) விஜயம் மேற்கொண்ட மத்திய மாகாண சபை உறுப்பினர் எஸ்.ஸ்ரீதரன், தோட்ட மக்களை சந்தித்து கலந்துரையாடியதுடன் அவர்கள் காட்டிய இடத்தில் வீடுகளை நிர்மாணிப்பது தொடர்பில் தோட்ட முகாமையாளர் ஸ்ரீகணேசனுடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார்.
தோட்ட முகாமையாளர் ஒப்புக்கொண்டதற்கமைய குடியிருப்புகளை அண்டிய பகுதியில் 2 ஏக்கர் காணியில் வீடுகளை நிர்மாணித்து கொடுக்க மலையக புதிய கிராமங்கள் தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.
இதன்படி ஒவ்வொரு வீடுகளும் 650,000 ரூபாய் செலவில் நிர்மாணிக்கப்படவுள்ளன. இதற்கான 3 1/2 இலட்சம் ரூபாய் நிதியை மலையக புதிய கிராமங்கள் உட்கட்டமைப்பு அமைச்சு வழங்கவுள்ளதுடன் மீதி தொகையை கடன் அடிப்படையில் மனிதவள அபிவிருத்தி நிலையம் வழங்கவுள்ளது.
இத்தோட்டத்தில், மண்சரிவு அபாயத்தை எதிர்கொண்டுள்ள மேலும் 20 குடும்பங்களுக்கு ஜனவரி மாதமளவில் வீடுகளை அமைத்துக் கொடுக்க நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும் மத்திய மாகாண சபை உறுப்பினர் எஸ்.ஸ்ரீதரன் தெரிவித்தார்.


5 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
5 hours ago