2025 ஓகஸ்ட் 14, வியாழக்கிழமை

போராட்டத்துக்கு ஆதரவு

Kogilavani   / 2017 மார்ச் 14 , மு.ப. 09:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை தோட்ட சேவையாளர் சங்கத்தின் கவனயீர்ப்பு போராட்டத்துக்கு, பெருந்தோட்ட சேவையாளர் காங்கிரஸ், தனது முழுமையான ஆதரவை வழங்குமென்று, அதன் பொதுச்செயலாளரும் சட்டதரணியுமான கா.மாரிமுத்து தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,  

'இலங்கை தோட்ட சேவையாளர் சங்கத்தின் போராட்டத்துக்கு, பெருந்தோட்ட சேவையாளர் காங்கிரஸ், முழுமையான ஆதரவை வழங்கும்.

தோட்ட சேவையாளர்களின் சம்பள உடன்படிக்கை, 2016ஆம் ஆண்டு, செப்டெம்பர் மாதத்துடன் நிறைவடைந்தது. உடன்படிக்கை நிறைவடைந்து ஆறுமாதங்கள் கடந்துவிட்டன. ஆனால், இதுவரை அடுத்தக்கட்ட  சம்பள உயர்வுக்கான தீர்வுகள் எட்டப்படாத நிலையில், இழுத்தடிப்பும், இழுபறியும் தொடர்கின்றன.

தற்போதைய சூழ்நிலையில், 25 சதவீத சம்பள உயர்வுக் கிடைத்தால் மட்டுமே, வாழ்க்கையைக் கொண்டு நடத்த முடியும். இதைவிட கூட்டொப்பந்தம், இரண்டு வருங்களுக்கு ஒருமுறை கைச்சாத்திடப்பட வேண்டுமென்ற கோரிக்கையையே, பெருந்தோட்ட சேவையாளர் காங்கிரஸ் முன்வைக்கின்றது.

அத்துடன், கடந்த ஒக்டோபர் மாதம் முதலான  நிலுவைச் சம்பளமும், பெருந்தோட்ட சேவையாளர்களுக்கு வழங்கப்பட வேண்டும்' என அவர் வலியுறுத்தியுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .