2026 ஏப்ரல் 08, புதன்கிழமை

புராதனப் பொருட்களுடன் பூசகர் கைது

Sudharshini   / 2016 மே 31 , மு.ப. 11:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.செல்வராஜா

பெறுமதிமிக்க புராதனப் பொருட்களை தன்வசம் வைத்திருந்த  குற்றச்சாட்டில் பதுளை, மீகாவெல பகுதியைச் சேர்ந்த  பூசகர் ஒருவரை, திங்கட்கிழமை (30) கைதுசெய்ததுடன், பெறுமதிவாய்ந்த பொருட்களையும் கைப்பற்றியதாக பதுளை பொலிஸார் தெரிவித்தனர்.

பதுளை பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலையடுத்து, பூசகர் வழிபட்டு வந்த வணக்கஸ்தளத்தை பொலிஸார் சுற்றி வளைத்ததுடன், அறையொன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 34 அங்குல உயரமான நாக சிலை, 2 ½ அங்குல உயரமான  சிலை, 125 இரத்தினக்கற்கள் மற்றும் அரசர்கள் பாவிக்கும் வாள் உட்பட பல பொருட்களைக் கைப்பற்றியுள்ளனர்.

இப்பொருட்கள் அனைத்தும் புதையல் ஒன்றிலிருந்து பெறப்பட்டவை என ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. இப்புராதனப் பொருட்களை, தொல்பொருள் ஆராய்ச்சி திணைக்களத்தில் ஒப்படைக்க நடவடிக்ககை எடுத்துள்ளதாக பதுளை பொலிஸார் தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .