Sudharshini / 2015 செப்டெம்பர் 03 , பி.ப. 03:11 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஆ.ரமேஷ்
பாலியல் துஷ்பிரயோக குற்றச்சாட்டில் கைதான இளைஞனை லிந்துலை பொலிஸார் விடுதலை செய்துள்ளதுடன் போலியான முறைப்பாட்டை மேற்கொண்டவர்களையும் எச்சரித்துள்ளனர்.
குடும்ப தகராறு காரணமாக, மாணவியை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்த முயன்றார் என பொலிஸ் நிலையத்தில் செய்யப்பட்ட முறைப்பாட்டையடுத்து, லிந்துலை பொலிஸார் பெரிய மட்டுக்கலையைச் சேர்ந்த இளைஞனை புதன்கிழமை(02) கைதுசெய்தனர்.
அந்த முறைப்பாடு போலியானது என விசாரணைகளின்போது அறிந்துகொண்ட பொலிஸார், அவ்விளைஞனை விடுதலை செய்ததுடன் முறைப்பாடு செய்தவர்களையும் கடுமையாக எச்சரித்துள்ளனர்.
இதேவேளை, ஆதாரமற்ற முறைப்பாடுகளை பதிவு செய்ய வேண்டாமென பொலிஸ் பொறுப்பதிகாரி ஏனைய பொலிஸாருக்கு பணித்துள்ளார்.
8 minute ago
56 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 minute ago
56 minute ago
1 hours ago