Sudharshini / 2015 செப்டெம்பர் 01 , பி.ப. 01:29 - 0 - {{hitsCtrl.values.hits}}

-ரஞ்சித் ராஜபக்ஷ
ஹட்டன், லக் சதொசவிலிருந்து மீட்கப்பட்ட சுமார் 8 இலட்சம் ரூபாய் பெறுமதியான, பாவனைக்குதவாத உணவுபொருட்கள் நேற்று செவ்வாய்க்கிழமை, ஹட்டன் குடாகமவில் வைத்து அழிக்கப்பட்டன.
7,780 கிலோகிராம் நாட்டரிசி, 1,250 கிலோகிராம் வெள்ளை அரசி, 67 கிலோ கௌப்பி என்பனவே இதன்போது அழிக்கப்பட்டன.
கடந்த ஜுலை மாதம் 7 ஆம் திகதி, ஹட்டன் நகரில் அமைந்துள்ள லக் சதொசவின் இரண்டு கிளைகளிலும் களஞ்சியப்படுத்தப்பட்டிருந்த, பாவனைக்குதவாத உணவு பொருட்களை பொகவந்தலாவை பொது சுகாதார பரிசோதகர்கள் கைப்பற்றினர்.
இதன்போது, 8 இலட்சம் ரூபாய் பெருமதியான அரிசி மற்றும் கௌப்பி என்பன மீட்கப்பட்டதுடன் சதொசவின் முகாமையாளர்கள், விற்பனை முகவர் மற்றும் பணிப்பாளர் சபைக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
இவ்வழக்கு கடந்த 28ஆம் திகதி விசாரணைக்கு எடுக்கப்பட்டபோது, மேற்படி முகாமையாளர்கள், விற்பனை முகவர், பணிப்பாளர் சபை என்பன பாவனைக்குதவாத வண்டு, புழுக்கள் அடங்கிய பெருந்தொகையான அரிசி, கௌப்பி பொதிகளை விற்பனை செய்தமை மற்றும் இறக்குமதி செய்தமை ஆகிய குற்றங்களை ஒப்புக்கொண்டமைக்கு அமைய, 45,000 ரூபாய் தண்டப்பணம் விதித்து ஹட்டன் நீதவான் நீதிமன்ற நீதவான் பிரசாத் லியனகே உத்தரவிட்டார்.
இதேவேளை, பாவனைக்குதவாத இப்பொருட்களை அழிக்குமாறும் அவர் பொகவந்தலாவை சுகாதார பரிசோதகர்களுக்கு உத்தரவிட்டார்.




8 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
9 hours ago