Freelancer / 2023 நவம்பர் 28 , பி.ப. 03:49 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஐக்கிய மக்கள் சக்தியின் பசறை தொகுதி அமைப்பாளராக லெட்சுமனார் சஞ்சய் நியமிக்கப்பட்டுள்ளார்.

குறித்த நியமன கடிதம், ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமை காரியாலயத்தில் கட்சியின் தலைவரும் எதிர்க்கட்சி தலைவருமான சஜித் பிரேமதாச ஊடாக வழங்கப்பட்டுள்ளது.
இந்நியமனம் தொடர்பில் அவர் கூறுகையில், “ஊவா மாகாணத்தில் குறிப்பாக பசறை தொகுதியில் மக்களுக்குச் சேவையாற்ற ஒழுங்கான தலைமைத்துவம் கிடையாது. அது மாத்திரமில்லாமல், தற்போதைய சூழ்நிலையில் இளைஞர்களின் கைகளிலேயே மாற்றம் தங்கியுள்ளது. இத்தனை காலமும் பதுளை மக்களுக்கு நான் ஆற்றிய சேவைகள் காரணமாக ஐக்கிய மக்கள் சக்தியின் பசறை தொகுதி அமைப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளேன்” என தெரிவித்துள்ளார்.
பிரசாந்த்
15 minute ago
22 minute ago
51 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 minute ago
22 minute ago
51 minute ago
2 hours ago