R.Maheshwary / 2022 பெப்ரவரி 02 , மு.ப. 11:18 - 0 - {{hitsCtrl.values.hits}}
ராமு தனராஜா
பசறை பிரதேச சபை ஊடாக முன்னெடுக்கப்படும் ' ஒலிபரப்பு அறிவுறுத்தல்கள் ' அனைத்தும் சிங்கள மொழியில் மட்டும் முன்னெடுக்கப்படுவதால், தமிழ் பேசும் மக்கள் பெரும் அசௌகரியங்களை எதிர்கொள்கின்றனர் .
பசறை பிரதேசத்தில் பிரதேச சபையில் 07 தமிழ் பேசும் பிரதிநிதிகள் காணப்படும் அதேவேளை, 52 சதவீதமான தமிழ்மொழி பேசும் மக்களும் வசித்து வருகின்றனர்
இந்த நிலையில், தமிழ் மொழி புறக்கணிக்கப்பட்டு வருவதாக குற்றஞ்சுமத்தப்படுகின்றது. பிரதேச சபையினால் பசறை பிரதேசத்தில் நடாத்தப்படும் விழிப்புணர்வு வேலைத்திட்டங்கள் மற்றும் அவசரமாக மேற்கொள்ளப்படும் ஒலிபரப்புக்கள் அனைத்துமே , தனிச்சிங்கள மொழியிலேயே காணப்படுவதாக குற்றஞ்சுமத்துகின்றனர்.
பிரதேச சபையில் அங்கம் வகிக்கும் தமிழ் பேசும் உறுப்பினர்களிடம் இது குறித்து , பிரதேச சபை அமர்வில் முன்வைக்குமாறு கூறினாலும் , பிரதிநிதிகள் எவ்வித நடவடிக்கையும் முன்னெடுப்பதில்லை என்றும் மக்கள் தெரிவிக்கின்றனர்.
9 minute ago
15 minute ago
16 minute ago
17 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 minute ago
15 minute ago
16 minute ago
17 minute ago