2025 ஓகஸ்ட் 14, வியாழக்கிழமை

பட்டதாரி ஆசிரியர் நியமனம்: ‘வர்த்தமானியை திருத்தவும்’

Niroshini   / 2017 மார்ச் 15 , பி.ப. 12:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம். செல்வராஜா

ஊவா மாகாண பட்டதாரி ஆசிரியர்களுக்கான நியமனங்கள் தொடர்பாக வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவிப்பில் தமிழ்மொழி மூலமான சங்கீதம் மற்றும் நடனத்துறைகளுக்கான நியமனங்களையும் கோரும் வகையில் மீளவும் வர்த்தமானி அறிவிப்பை வெளியிட நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு, ஊவா மாகாண ஆளுநர் எம்.பி. ஜயசிங்க தெரிவித்துள்ளார்.

இவ்விடயம் குறித்து நாடாளுமன்ற உறுப்பினர் அரவிந்தகுமார், மாகாண ஆளுநரின் கவனத்துக்கு கொண்டு வந்ததையடுத்து, மாகாண கல்விப் பணிப்பாளருக்கு ஆளுநர் அனுப்பியுள்ள அவசரக் கடிதத்திலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை,  அ. அரவிந்தகுமார் எம்.பி ஆளுநருக்கு அனுப்பிய கடிதத்தில் குற்றிப்பிடப்பட்டுள்ளதாவது,

“ஊவா மாகாண பட்டதாரி ஆசிரியர்களுக்கான நியமனங்கள் தொடர்பாக வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவிப்பில், தமிழ் மொழி மூலமான சங்கீதம் மற்றும் நடனத்துறைகளுக்கான நியமனங்கள் கோரப்படாமை விண்ணப்பதாரிகளுக்கு பெரும் அசௌகரியங்களை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ் மொழி மூலமான சங்கீதம் மற்றும் நடனத்துறைகளில் பட்டம் பெற்றவர்களுக்கும் நியமனங்களைப் பெற்றுக்கொடுக்கும் வகையில், வர்த்தமானி அறிவிப்பினை வெளியிடுமாறும் கேட்டுக்கொள்கின்றேன். அவ்வகையில். வெளியிடும் பட்சத்தில் குறிப்பிட்ட விடயங்களில் பட்டம் பெற்றவர்களும் விண்ணப்பிக்கக் கூடியதாக இருக்கும். அதன் மூலம் அவ்விண்ணப்பதாரிகளும் பயனடைவர்” எனக் குறிப்பிட்டுள்ளது.

இது குறித்து கவனம் செலுத்திய ஊவா மாகாண ஆளுனர் எம்.பி. ஜயசிங்க,  ஊவா மாகாண கல்விப் பணிப்பாளருக்கு அவசரக் கடிதமொன்றை அனுப்பியமை குறிப்பிடத்தக்கது


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .