Mayu / 2026 மே 05 , மு.ப. 11:15 - 0 - {{hitsCtrl.values.hits}}
நாவலப்பிட்டி பகுதியில் இன்று (05) காலை பாடசாலை வேன் ஒன்று வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதில், 13 பாடசாலை மாணவர்களும் அதன் சாரதியும் காயமடைந்துள்ளனர்.
நாவலப்பிட்டி, கடபுல பகுதியிலிருந்து ஹரன்கல நோக்கி மாணவர்களை ஏற்றிச் சென்ற பாடசாலை வேன் ஒன்றே இன்று காலை 6.30 மணியளவில் விபத்துக்குள்ளாகியுள்ளது. கட்டுப்பாட்டை இழந்த வேன், வீதியை விட்டு விலகி சுமார் 10 அடி பள்ளத்தில் வீழ்ந்து மோதுண்டதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த விபத்தில் 11 மாணவிகளும் 2 மாணவர்களும் காயமடைந்துள்ளனர். காயமடைந்த 13 மாணவர்களும், வேன் சாரதியும் உடனடியாக மீட்கப்பட்டு சிகிச்சைக்காக நாவலப்பிட்டி மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் நாவலப்பிட்டி பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். வாகனத்தின் இயந்திரக் கோளாறு அல்லது சாரதியின் கவனக்குறைவு விபத்துக்குக் காரணமா என்பது குறித்து விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.
20 minute ago
36 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
20 minute ago
36 minute ago