2026 மே 06, புதன்கிழமை

படல்கும்புரயில் திடீர் சுற்றிவளைப்பு; கசிப்புடன் எழுவர் கைது

Editorial   / 2020 ஏப்ரல் 01 , பி.ப. 02:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

சுமனசிறி குணத்திலக்க

படல்கும்புர பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில், பொலிஸார் நேற்று (31) மாலை மேற்கொண்ட திடீர் சுற்றிவளைப்பின்போது, கசிப்புடன் எழுவர் கைதுசெய்யப்பட்டனர் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

வானொன்றில் கசிப்புக் கொண்டுச் சென்ற இருவர், கசிப்பு அருந்திக் கொண்டிருந்த மூவர், கசிப்பை தன்வசம் வைத்திருந்த இருவர் உள்ளடங்களாக எழுவரே, இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

படல்கும்புர நகர், மடமகம, யட்டிமுல்ல, கரதகம ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த  எழுவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இதன்போது, கசிப்பு கொண்டு செல்லப்பட்ட வானிலிருந்து 3 லீற்றர் 75 மில்லிலீற்றர் கசிப்பு, 21,000 மில்லிலீற்றர் கோடா, கசிப்பு தயாரிப்பதற்கான உபகரணங்கள் என்பவற்றையும் பொலிஸார் கைப்பற்றினர்.

மேற்படி எழுவரையும் நீதிமன்றில் ஆஜர்படுத்தவுள்ள பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .