2025 ஓகஸ்ட் 13, புதன்கிழமை

பட்டதாரிகளை ஏமாற்றிய ஆசிரியை கைது

Editorial   / 2025 ஓகஸ்ட் 06 , பி.ப. 07:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

சப்ரகமுவ மாகாண சபையில் ஆசிரியர் நியமனங்களை வழங்குவதாக கூறி, 23 பட்டதாரிகளிடமிருந்து லட்சக்கணக்கான ரூபாய்களைப் பெற்றதாக சந்தேகத்தின் பேரில், ஒரு பாடசாலை ஆசிரியையும் அவரது கணவர் என்று கூறிக்கொள்ளும் ஒருவரையும் கைது செய்துள்ளதாக இரத்தினபுரி பொலிஸார் தெரிவிக்கின்றனர். சந்தேகத்திற்குரிய ஆசிரியர் எஹெலியகொட புறநகர்ப் பகுதியில் உள்ள ஒரு பாடசாலையில் ஆங்கில ஆசிரியராகப் பணியாற்றி வருவதாக பொலிஸார் தெரிவித்தனர். அவர் முப்பத்தெட்டு வயதுடைய பெண். சில காலத்திற்கு முன்பு ஒரு அரசியல்வாதியுடன் நெருக்கமாக இருந்ததாகவும் பொலிஸார் கூறுகின்றனர். அந்தக் காலகட்டத்தில், சப்ரகமுவ மாகாண சபையில் ஆசிரியர் நியமனங்களை வழங்குவதாகக் கூறி பட்டதாரிகளிடம் இரண்டு லட்சம், மூன்று லட்சம் ரூபாய் பெற்று வருவதாக போலிஸாருக்கு ஏராளமான புகார்கள் வந்ததாக மூத்த பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .