Editorial / 2020 ஏப்ரல் 09 , பி.ப. 01:56 - 0 - {{hitsCtrl.values.hits}}
கண்டி மாவட்டத்தில் தான் முன்னெடுத்துவரும் நிவாரணப் பணிகளுக்கு தடை விதிக்கும் வகையில், இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்கள் செயற்பட்டு வருவதாக, கண்டி மாவட்ட முன்னாள் எம்.பி வேலுகுமார் குற்றஞ்சாட்டியுள்ளார்.
கண்டி - பன்வில பிரதேச செயலகப் பிரிவில், தன்னால் மேற்கொள்ளப்பட்டு வரும் நிவாரணப் பணிக்குத் தடை விதிக்குமாறு, இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் உறுப்பினரும், பன்வில பிரதேச சபையின் உப தவிசாளரும் கோரிக்கை விடுத்துள்ளதாகவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில், நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடியான சூழ்நிலையிலும், களத்தில் இருந்து தாம் பணியாற்றிக் கொண்டிருப்பதாகவும் எனவே, முதுகில் குத்தி அரசியல் நடத்த முற்பட வேண்டாம் என்றும், மக்களின் சார்பில் கேட்டுக்கொண்டுள்ளார்.
இ.தொ.காவின் பொறுப்புவாய்ந்த அதிகாரிகள், இது தொடர்பில் பதிலளிக்க வேண்டும் என்றும் எவராலும் தனது பணிகளை நிறுத்த முடியாது என்பதையும் கூறிவைக்க விரும்புவதாகவும், அவர் தெரிவித்தார்.
23 minute ago
4 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
23 minute ago
4 hours ago
5 hours ago