2025 ஓகஸ்ட் 14, வியாழக்கிழமை

பதுளைக்கான ரயில் சேவை பாதிப்பு

Kogilavani   / 2017 ஏப்ரல் 04 , பி.ப. 01:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொழும்பு கோட்டையிலிருந்து பதுளை நோக்கிப்  பயணித்த விசேட ரயில், வட்டவலை- ரொசெல்ல பகுதியில், தண்டவாளத்திலிருந்து விலகி விபத்துக்குள்ளாகியுள்ளது.

எனினும், பயணிகள் பாதுகாப்பான முறையில் பஸ்களில் அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக, ரயில்வே திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதனால், பதுளை-கொழும்பு, கொழும்பு-பதுளைக்கான ரயில்சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், போக்குவரத்து சீர்செய்யப்படும் வரை, கொழும்புக்கான ரயில்சேவை ஹட்டனிலிருந்தே ஆரம்பமாகுமெனவும் அதிகாரிகள் தெரிவித்தள்ளனர்.

இதேவேளை, கொழும்பு கோட்டையிலிருந்து பதுளைக்கு பயணிக்கும் ரயில், வட்டவளை புகையிரத நிலையம் வரை மட்டுமே செல்லும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

போக்குவரத்தை சீர் செய்யும் நடவடிக்கையில், ரயில்வே திணைக்கள அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .