Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை
R.Maheshwary / 2022 ஒக்டோபர் 05 , பி.ப. 01:35 - 0 - {{hitsCtrl.values.hits}}
எஸ்.கணேசன்
கொட்டகலை, திம்புளை - பத்தனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மவுண்ட்வேர்ணன் தோட்டத்தின் வட்டக்கான் பிரிவிலுள்ள வீடொன்றுக்குள் சிக்கிய சிறுத்தை, சுமார் 5 மணிநேர கூட்டு நடவடிக்கையின் பின்னர் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளது.
இன்று அதிகாலை இந்த சிறுத்தை வீடொன்றின் பின்புறம் பதுங்கியதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
ரந்தெனிகல மிருக வைத்தியசாலையின் அதிகாரிகள் குழுவொன்றும், நுவரெலியா வன ஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளும் இணைந்தே, குறித்த சிறுத்தையைப் பிடிப்பதற்கான நடவடிக்கையில் இறங்கினர்.
குறித்த கூட்டு நடவடிக்கை வெற்றிகரமாக முடியும் வரை பிரதேசத்துக்கு தேவையான பாதுகாப்பை திம்புளை - பத்தனை பொலிஸார் வழங்கினர்.
சுமார் 4 அடி நீளமான, ஒரு வயதான இந்த ஆண் சிறுத்தை நாயொன்றை வேட்டையாட வந்தவேளை, வீட்டின் பின்பகுதியில் உள்ள அறைக்குள் விழுந்து அதற்குள் சிக்கியிருக்கலாம் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
மீட்கப்பட்டுள்ள சிறுத்தை, ரந்தெனிகல மிருக வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.
அதன் உடல் நிலை பரிசோதிக்கப்பட்ட பின்னர், குறிப்பிட்ட காலப்பகுதிக்குள் அது பாதுகாப்பான வனப்பகுதியில் விடுவிக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
59 minute ago
1 hours ago
3 hours ago