2026 மே 02, சனிக்கிழமை

பதுளை கலால் திணைக்களத்துக்கு ரூ. 2.4 மில். வருமானம்

எம். செல்வராஜா   / 2019 பெப்ரவரி 26 , மு.ப. 11:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

சட்டவிரோத மதுபான உற்பத்தி, விற்பனை போன்ற குற்றச்செயல்களில் ஈடுபட்டவர்களுக்கு விதிக்கப்பட்ட அபராதத் தொகையினூடாக, பதுளை மாவட்ட கலால் திணைக்களத்துக்கு, 2.4 மில்லியன் ரூபாய் வருமானமாகக் கிடைக்கப்பெற்றுள்ளதாக, திணைக்களத்தின் அதிகாரிகள் தெரிவித்தனர்.  

இது தொடர்பில் கருத்துத் தெரிவித்த பதுளை மாவட்டக் கலால் திணைக்கள அதிகாரி கபில விஜேயசிங்க, சட்டவிரோத மதுபான உற்பத்தியில் ஈடுபட்டவர்களிடமிருந்தே, 2.4 மில்லியன் ரூபாய் வருமானமாகக் கிடைக்கப்பெற்றுள்ளது என்றார்.  

மேலும், தமக்குக் கிடைக்கும் இரகசியத் தகவல்களையடுத்து, குறிப்பிட்ட இடங்களில் சுற்றிவளைப்புகளை மேற்கொண்டு, சட்டவிரோத மதுபான உற்பத்தி, விற்பனையில் ஈடுபடுவர்களைக் கைதுசெய்வதாகத் தெரிவித்தார். 

கடந்த ஆறு மாதங்களில், 724 சுற்றிவளைப்புகளை மேற்கொண்டதாகவும் இந்தச் சுற்றிவளைப்புகளில் கைதுசெய்யப்பட்டவர்கள், பதுளை, பசறை, பண்டாரவளை, வெலிமடை ஆகிய பிரதேசங்களுக்கு உட்பட்ட நீதிமன்றங்களில் ஆஜர்படுத்தப்பட்டனர் என்றும், இந்நீதிமன்றங்கள் ஊடாகவே 2.4 மில்லியன் ரூபாய் அபராதமாக விதிக்கப்பட்டது என்றும் அவர் தெரிவித்தார்.   

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .