2025 ஓகஸ்ட் 14, வியாழக்கிழமை

பதுளை தேவாலயங்களுக்கும் தாக்குதல்கள் நடத்த முயற்சி?

Editorial   / 2019 ஏப்ரல் 25 , பி.ப. 02:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாலித ஆரியவன்ச

 

உயிர்த்த ஞாயிறன்று (21), கொழும்பு உள்ளிட்ட தேவாலயங்களில் மேற்கொள்ளப்பட்ட தற்கொலைக் குண்டுத் தாககுதல்களைப் போன்று, பதுளை புனித மரியாள் தேவாலயம், மார்க் தேவாலயங்களிலும்  தாக்குதல் மேற்கொள்ளப்பட இருந்ததாக சந்தேகம் எழுந்துள்ளது என்று, சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

குண்டு வெடிப்பை மேற்கொள்ள வந்ததாக சந்தேகிக்கப்படும் இரண்டு இளைஞர்கள் நடமாடும் காட்சிகள், இந்த தேவாலயங்களில் உள்ள சீசீடிவிக்களில் பதிவாகியுள்ளன.

ஒரு நபர் பையொன்றை தோளில் போட்டவாறு வரும் காட்சியும் மற்றைய நபர் அதனை உன்னிப்பாக அவதானிக்கும் காட்சியும் கமராக்களில் பதிவாகியுள்ளது.

ஒரு தேவாலயத்தில் தாக்குதல் இலக்கு தவறியதால், மற்றைய தேவாலயத்துக்குச் செல்லும் காட்சியும் பதிவாகியுள்ளது.

கொழும்பில் குண்டு வெடிப்புச் சம்பவம் நடந்ததையடுத்து, உடனடியாக செயற்பட்ட பதுளை தலைமையக பிரதான பொலிஸ் பரிசோதகர்,  தேவாலயங்களுக்கு சென்று ஆராதனைக்கு வந்திருந்த மக்களை திருப்பி அனுப்பியதுடன் பங்கு தந்தைகளுக்கும் தெளிவுப்படுத்தியிருந்தனர்.

இதனால், குண்டுதாரிகளின் தாக்குதல் இலக்கு தவறியிருக்கலாம் என சந்தேகம் தெரிவிக்கபடுகிறது. இந்த சந்தேகநபர்களை அடையாளம் காண உதவுமாறு, பொலிஸார் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இது குறித்து பதுளை தலைமையக பொலிஸார்  மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .