Kogilavani / 2021 ஜனவரி 04 , பி.ப. 12:53 - 0 - {{hitsCtrl.values.hits}}
நா.மலர்வேந்தன்
பதுளை மாவட்டத்தில், கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக, பொதுசுகாதார பரிசோதகர்கள் தெரிவித்துள்ளனர்.
மேற்படி மாவட்டத்தில் தற்போது வரை 101 தொற்றாளர்கள் இனம்காணப்பட்டுள்ளதுடன் 1,346 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என்று, பொதுசுகாதார பரிசோதகர்கள் தெரிவித்துள்ளனர்.
இதில் பசறை, பண்டாரவளை, ஹப்புத்தளை, ஹல்துமுல்ல போன்ற பிரதேச செயலாளர் பிரிவுகளிலேயே அதிகளவான தொற்றாளர்கள் இனம்காணப்பட்டுள்ளனர்.
இம்மாவட்டத்தில் தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் வாய்ப்புக் காணப்படுவதால், சுகாதார விதிமுறைகளைப் பின்பற்றி நடக்குமாறு, பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
2 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
5 hours ago