2025 ஓகஸ்ட் 23, சனிக்கிழமை

பதுளை விபத்தில் சிக்கியவர்களின் தற்போதைய நிலை என்ன?

Freelancer   / 2024 நவம்பர் 02 , பி.ப. 12:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

துன்ஹிந்த – பதுளை வீதியில் நேற்று (1) காலை இடம்பெற்ற பேருந்து விபத்தில் படுகாயமடைந்து பதுளை போதனா வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டவர்கள் ஆபத்தான நிலையை கடந்துள்ளதாக வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவின் சிரேஷ்ட வைத்திய அதிகாரி பாலித ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். 

வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட அனைவரும் தற்போது நலமுடன் உள்ளதாகவும் அவர் தெரிவித்தார். 

தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வரும் பத்து பேரில் சிலர் இன்று பொது வார்டுக்கு மாற்றப்படலாம் என்றும் அவர் தெரிவித்தார்.

நிலவரப்படி எந்தவொரு நோயாளியையும் விமானத்தில் கொழும்புக்கு அழைத்துச் செல்ல வேண்டிய அவசியமில்லை. காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்க தேவையான அனைத்து வசதிகளும் மருத்துவமனையில் உள்ளது" என்றார். R


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X