2026 மே 09, சனிக்கிழமை

dd

பதுளை ஸ்ரீ மாணிக்க விநாயகர் கோவில் மகோற்சவம்

எம். செல்வராஜா   / 2019 ஓகஸ்ட் 21 , பி.ப. 02:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

பதுளை, அருள்மிகு ஸ்ரீ மாணிக்க விநாயகர் கதிர்வேலாயுத சுவாமி கோவில் விகாரி வருட வசந்த கால அலங்கார மகோற்சவப் பெருவிழா, இம்மாதம் 31ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி, செப்டெம்பர் மாதம் 16ஆம் திகதி நடைபெறும் வைரவர் மடைப் பூஜைகளுடன் நிறைவடையவுள்ளது.

தொடர்ச்சியாக 18 நாள்கள் நடைபெறவுள்ள இந்தப் பூஜை நிகழ்வுகள், ஆலய பிரதம குரு கிரியாஜோதி சிவஸ்ரீ பால லெச்சுமணக் குருக்கள் தலைமையில் நடைபெறவுள்ளதுடன், சிவாச்சாரிய திலகம் சிவஸ்ரீ நாராயண சண்முகநாதக் குருக்கள் ஆகியோர் மகோற்சவ கால பெருவிழா பூஜைகளை, ஆகம விதிப்படி நடத்தி வைக்கவுள்ளனர்.

கொடியேற்றத்துக்கு முதல் தினமான 30ஆம் திகதி, விநாயகர் வழிபாடு, புண்ணியாவாசனம், வாஸ்து சாந்தி இடம்பெற்று, 31ஆம் திகதி, மயூர அலங்கார கொடியேற்றம் இடம்பெற்று, 11ஆம் திகதி வரையான 11 நாள்களுக்கு, பூஜைகள் இடம்பெறவுள்ளன.

12ஆம் திகதி, பால்குட பவனியும், 1,008 சகஸ்ர சங்காபிஷேகமும் அதைத் தொடர்ந்து அன்னதானமும் வழங்கப்படவுள்ளதுடன், 13ஆம் திகதி, இரதோற்சவப் பவனி நடைபெற்று, ஆம திகதி, சுவாமிகள் தீர்த்தமாடி ஆலயம் வந்தடைந்தது, கொடியிறக்கம் இடம்பெறவுள்ளது.

இந்நிலையில், 15ஆம் திகதி, பூங்காவனப் பெருவிழா உற்சவமும் 16ஆம் திகதி வைரவர் மடைப் பூஜையுடன் மகோற்சவம் நிறைவடையும்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .