R.Maheshwary / 2021 நவம்பர் 22 , பி.ப. 02:49 - 0 - {{hitsCtrl.values.hits}}
பாலித ஆரியவன்ஸ
பதுளை பொது வைத்தியசாலையில் கொரோனா தொற்றுக்குள்ளாகி, இந்த மாதம் 16ஆம் திகதியிலிருந்து நேற்று வரை சிகிச்சைப் பெற்று வந்த 16 பேர் உயிரிழந்துள்ளனர் என, அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் பதுளை கிளையின் தலைவர் பாலித ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.
இவ்வாறு உயிரிழந்தவர்களுள் 14 வயது சிறுமியும் அடங்குவதாகத் தெரிவித்துள்ள அவர், 16ஆம் திகதி ஐவரும் 18ஆம் திகதி மூவரும், 21ஆம் திகதி ஐவரும் இன்று (22) மூவரும் உயிரிழந்துள்ளனர் என்றார்.
உயிரிழந்தவர்கள் 14, 25,40, 36 மற்றும் 87 வயதுக்கு இடைப்பட்டவர்கள் என்றும் இவர்கள் எல்ல, பதுளை, மடுல்சீமை, பண்டாரவளை, வெல்லவாய, ஹாலிஎல, மீகஹ்ஹிக்கவுல, வெலிமட, கந்தகெட்டிய, மஹியங்கனை, உடப்புஸல்லாவை ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் என்றும் தெரிவித்தார்.
2 hours ago
7 hours ago
7 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
7 hours ago
7 hours ago
8 hours ago