2025 மே 19, திங்கட்கிழமை

பதுளையில் நள்ளிரவில் தாயும் மகளும் வெட்டிக்கொலை

Freelancer   / 2022 செப்டெம்பர் 10 , பி.ப. 12:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

பதுளை - ஹிங்குருகம கெலன்பில் தோட்டத்தில் தாயும் மகளும் கூரிய ஆயுதங்களால் தாக்கி கொலை செய்யப்பட்டுள்ளனர்.

 83 மற்றும் 55 வயதுடைய பெண்களே நேற்று இரவு  படுகொலை செய்யப்பட்டுள்ளதாக  பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

62 வயதுடைய மற்றுமொரு பெண் படுகாயமடைந்த நிலையில் பதுளை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

முகத்தை மூடிய நிலையில் வந்த சிலரே இவர்களை தாக்கியுள்ளதாக விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

இந்தநிலையில் இந்த சம்பவத்துக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை. (R)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X