R.Maheshwary / 2021 ஓகஸ்ட் 26 , மு.ப. 10:21 - 0 - {{hitsCtrl.values.hits}}
பாலித ஆரியவன்ஸ
சருங்கல்கந்த என அழைக்கப்படும் பதுளை- ரிதிபான மலைப்பகுதியிலிருந்து மண்டையோடு மற்றும் மனித எச்சங்கள் சிலவும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பதுளை பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த மலைப்பகுதிக்கு கொய்யாபழம் பறிக்கச் சென்ற சிறுவர்கள், இந்த மனித எச்சங்களை கண்டுள்ளதுடன், இவைத் தொடர்பில் தமது பெற்றோரிடம் தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து, நேற்று இரவு (25) பதுளை பொலிஸாருக்கு பெற்றோர் தகவல் வழங்கியதையடுத்து, இன்று காலை (26) சம்பவ இடத்தில் விசேட சோதனையொன்று முன்னெடுக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
அத்துடன், இதுசந்தேகத்துக்குரிய மரணம் என கருதி, விசாரணைகள் மற்றும் நீதிமன்ற நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளதாகவும் தெரிவித்தனர்
29 minute ago
2 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
29 minute ago
2 hours ago
4 hours ago