R.Maheshwary / 2022 ஜனவரி 11 , மு.ப. 04:35 - 0 - {{hitsCtrl.values.hits}}
சுமணசிறிகுணதிலக
குடாஓயா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தேஎல்ல பிரதேசத்திலுள்ள ஸ்ரீபத்திரகாளியம்மன் கோவிலிலிருந்து பணத்தைகொள்ளையிட்டு, அக்கோவிலின் பூசகர், மனைவி மற்றும் அவர்களின் குழந்தையை கடத்திச்சென்ற குற்றச்சாட்டில் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அவர்களிடமிருந்து இரண்டு கார்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.
மொனராகலை பொலிஸாரால், நேற்றுமுன்தினம் (9) சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்தமாதம் 3ஆம் திகதி ஆயுதங்களுடன் கோவிலுக்கு வருகைத் தந்த சந்தேகநபர்கள், கோவிலிலிருந்த 7இலட்சத்து 75ஆயிரம் ரூபாய் பணத்தை கொள்ளையிட்டுள்ளனர்.
இந்தசம்பவம்தொடர்பில்,மொனராகலை பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளுக்கு அமைய, திஸ்ஸமஹாராம பகுதியில் பிரபல பாதாளக்குழு உறுப்பினரான கொண்ட ஜுவா மற்றும் அவரது சகாக்களே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
அந்த கோவிலின் பூசகருடன் இருக்கும் கொடுக்கல் வாங்கல் முரண்பாடு காரணமாகவே, இந்தச் சம்பவம் இடம்பெற்றதாக ஆரம்பக்கட்ட விசாரணைகள்மூலம் தெரியவந்துள்ளது.
35 minute ago
35 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
35 minute ago
35 minute ago
2 hours ago