2026 ஜனவரி 22, வியாழக்கிழமை

பனிமூட்டம் அதிகரிப்பு; வாகன சாரதிகளுக்கு எச்சரிக்கை

Kogilavani   / 2021 ஜனவரி 11 , பி.ப. 02:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

சுதத் எச்.எம்.ஹேவா

மத்திய மாகாணத்தில் நீடித்துவரும் சீரற்ற வானிலை காரணமாக, அதிகாலை வேளையில் பனிமூட்டம் அதிகரித்துக் காணப்படுவதாகவும் எனவே, வாகன சாரதிகள் மிகுந்த அவதானத்துடன் வாகனங்களைச் செலுத்துமாறும் பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.

ஹட்டன்-கொழும்பு பிரதான வீதி, ஹட்டன்-நுவரெலியா பிரதான வீதி ஆகிய வீதிகளில் பனிமூட்டம் அதிகரித்துக் காணப்படுவதாக பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.

எனவே, வாகன சாரதிகள் வாகனங்களின் முன்விளக்குகளை ஒளிரவிட்டும் வேகத்தைக் கட்டுப்படுத்தியும் வாகனங்களைச் செலுத்துமாறு, பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X