2025 டிசெம்பர் 22, திங்கட்கிழமை

பன்மூர் குளத்தில் விழுந்த இளைஞனின் சடலம் மீட்கப்பட்டது

R.Maheshwary   / 2022 ஓகஸ்ட் 03 , பி.ப. 02:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரஞ்சித் ராஜபக்ஸ

ஹட்டன்- பன்மூர் குளத்தில் வீழ்ந்த இளைஞன் இன்று(3) முற்பகல் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

எபோட்சிலி- மொன்டிபெயார் தோட்டத்தை சேர்ந்த 22 வயதுடைய மைக்கல் பவன் என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

 கொழும்பிலிருந்து  வரவழைக்கப்பட்ட கடற்படை சுழியோடிகள் மூலம் மீட்கப்பட்ட சடலம் பிரேத பரிசோதனைக்காக கிளங்கன் வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளது.

முதலாம் திகதி  இரவு எட்டு மணியளவில் ஹட்டன் நகரிலிருந்து இரண்டு நண்பர்களுடன் குறித்த இளைஞன் மென்டிபெயார் தோட்டத்திலுள்ள தனது வீட்டிற்கு நடந்து சென்ற போதே வீதியோரத்திலுள்ள குளத்தில் வீழ்ந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

மலையகத்தில் தொடர்ச்சியாக நிலவி வரும் சீரற்ற வானிலையால், குறித்த பன்மூர் குளத்தின் நீர் அதிகரித்து காணப்பட்டதாகவும் இதன்போது இரவு அவ்வழியே தனது நண்பர்களுடன் நடந்து சென்ற இளைஞன் வழுக்கி விழுந்திருக்கலாம் என சந்தேகிப்பதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X