2025 மே 13, செவ்வாய்க்கிழமை

பயிர்ச்செய்கைகளைப் பாதுகாக்க ஒளி துப்பாக்கித் தயாரிப்பு

Gavitha   / 2020 ஒக்டோபர் 08 , பி.ப. 01:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

என்.ஆராச்சி

கேகாலை மாவட்டத்துக்கு உட்பட்ட பிரதேசங்களில் முன்னெடுக்கப்பட்டு வரும் பயிர்ச்செய்கைகளை விலங்குகள், பறவைகளிடமிருந்துப் பாதுகாக்கும் நோக்கில் ஒளி துப்பாக்கி ஒன்று தயாரிக்கப்பட்டுள்ளது.

கேகலை தொலுங்கமுவ பிரதேசத்தைச் சேர்ந்த எச்.எச்.லால் பிரேமசிறி என்பவரே, இந்தத் துப்பாக்கியைத் தயாரித்துள்ளார்.

இந்தத் துப்பாக்கி 3000 ரூபாய் பெறுமதியானது என்றும் 150 மீற்றர் தொலைவுவரை இந்தத் துப்பாக்கியைப் பயன்படுத்த முடியும் என்றும் அவர் தெரிவித்தார்.

கேகாலை மாவட்டச் செயலாளரிடம் இந்தத் துப்பாக்கியை அறிமுகப்படுத்தி வைத்த அவர், சந்தைகளுக்கு இந்தத் துப்பாக்கியை விநியோகிப்பதற்கான அனுமதியைப் பெற்றுத்தருமாறும் கோரிக்கை விடுத்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X