2026 ஏப்ரல் 20, திங்கட்கிழமை

‘பயிர்ச்செய்கையின் ஆர்வத்தைத் தொடருக’

Editorial   / 2020 மே 05 , பி.ப. 01:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

புவியரசன்

கொவிட்-19 பாதிப்பு காரணமாக, தன்னிறைவு பொருளாதாரத்தை நோக்காகக் கொண்டு, தோட்டங்களில் உள்ள தொழிலாளர்களும் இளைஞர்களும், விவசாய நிலங்களிலும் தரிசு நிலங்களிலும் முன்னெடுத்துள்ள பயிர்ச்செய்கை நடவடிக்கையை இடை நடுவில் கைவிட்டு விடாது, தொடர்ந்தும் மேற்கொள்வதற்கான  வேலைத்திட்டத்தை வகுத்துக் கொள்ளவேண்டும் என, இலங்கை தொழிலாளர் ஐக்கிய முன்னணியின் நிதிச் செயலாளர் சலோபராஜா கோரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பாக இன்று (05) கருத்துத் தெரிவித்த அவர்,

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக, கொழும்பு உள்ளிட்ட வெளியிடங்களில் தொழில் செய்து வந்த, தற்போது தொழிலை இழந்து சொந்த வீடுகளுக்குத் திரும்பியுள்ள இளைஞர், யுவதிகள், விவசாய நடவடிக்கையில் ஆர்வம் காட்டி வருவதாகக் கூறிய அவர், இதன் காரணமாக, இதுவரையில் கைவிடப்பட்டிருந்த விவசாய நிலங்கள் செப்பனிடப்பட்டு, விளை நிலங்களாக மாற்றம் அடைந்துள்ளதாகவும் எனவே, இந்த ஆர்வம் தொடர்ந்தும் நீடிக்கவேண்டும் என்றும் அவர் கூறினார்.

இந்நிலையில், இவர்களுக்குத் தேவையான உதவிகளை, விவசாய நலன்புரி அமைப்புகள் ஏற்படுத்திக்கொடுக்கவேண்டும் என்றும் அத்துடன், கமநல சேவைகள் திணைக்களம் மற்றும் விவசாயத் திணைக்களம் ஆகியவையும் இவற்றுடன் கைகோர்க்கவேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .