2026 மே 09, சனிக்கிழமை

பயிற்றுநர் வழிகாட்டு நூல் வெளியீடு

ஆ.ரமேஸ்   / 2020 பெப்ரவரி 20 , பி.ப. 12:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆரம்ப கல்வி மாணவர்களின் வாழ்க்கைத் தேர்ச்சிகளை வலுவூட்டும் பெற்றோர் விழிப்புணர்வு தொடர்பான பயிற்றுநர் வழிகாட்டி நூல் வெளியீடு நிகழ்வு, நுவரெலியா வலைய கல்வி காரியாலய கேட்போர் கூடத்தில் நேற்று (19) நடைபெற்றது.

வேல்ட் விஷன் லங்கா நுவரெலியா பிராந்தியம், நுவரெலியா வலயக் கல்விக் காரியாலயம் இணைந்து, இந்த நூல் வெளியீட்டு வி​ழாவை நடத்தியிருந்தது.

இந்நிகழ்வில், வலயக்கல்விப் பணிப்பாளர் எம்.ஜி.ஏ.பியதாஸ, உதவிக் கல்விப் பணிப்பாளர் எஸ்.மோகன்ராஜ், ஆரம்பக்கல்விப் பணிப்பாளர் எஸ்.செல்வராஜ், வேல்ட் விஷன் லங்கா நுவரெலியா பிராந்திய அபிவிருத்தித் திட்ட முகாமையாளர் எலக்ஸ் பென்ஜமின், வேல்ட் விஷன் லங்கா பிராந்திய முகாமையாளர் பெஞ்சமின் தாசன், கல்வி வலய நிபுணர் திருமதி அனுசூயா உள்ளிட்ட அபிவிருத்தி இணைப்பாளர்களான எம்.சண்முகவடிவேல், மேலின் கோமஸ், செல்வி மெட்டில்டா ஆகியோருடன் நுவரெலியா வலயக் கல்விக்குட்பட்ட 60 பாடசாலைகளின் அதிபர்கள், ஆசிரியர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .