R.Maheshwary / 2021 டிசெம்பர் 09 , மு.ப. 11:00 - 0 - {{hitsCtrl.values.hits}}

எஸ்.கணேசன்
தலவாக்கலை- சென்.கிளையார் பகுதியில் இன்று (9) அதிகாலை ஒரு மணியளவில் இடம்பெற்ற வாகன விபத்தில், சாரதி படுங்காயமடைந்து, நுவரெலியா மாவட்ட வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.
நுவரெலியா பகுதியிலிருந்து கொட்டகலை பகுதிக்கு சென்ற கார் ஒன்று நுவரெலியா – ஹட்டன் பிரதான வீதியில், சென்.கிளயார் பகுதியில் வீதியை விட்டு விலகி சுமார் 100 அடி பள்ளத்தில் பாய்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
மேற்படி காரில் சாரதி மட்டும் பயணித்துள்ளதாகவும், அவரே இவ்வாறு காயங்களுக்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சாரதி மதுபானம் அருந்தியிருந்ததாகவும், இதனால் அவரின் கவனயீனம் காரணமாகவே இவ்விபத்து நேர்ந்துள்ளதாக தலவாக்கலை போக்குவரத்து பொலிஸார் தெரிவித்தனர்.
10 minute ago
5 hours ago
6 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
10 minute ago
5 hours ago
6 hours ago
6 hours ago