Ilango Bharathy / 2021 செப்டெம்பர் 28 , மு.ப. 08:19 - 0 - {{hitsCtrl.values.hits}}
கே.சுந்தரலிங்கம்
மலையகத்தலி கடந்த சில தினங்களாக நிலவும் மழையுடனான வானிலையால், பல இடங்களில் மண்சரிவு அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால், ஹட்டன் -கொழும்பு மற்றும் ஹட்டன்- நுவரெலியா வீதிகளின் பல இடங்களில் மண்சரிவு அபாயம் ஏற்பட்டுள்ளது.
நேற்று (27) காலை ஹட்டன் - கொழும்பு பிரதான வீதியின் ஸ்ரதன் பகுதியில் மண்திட்டுடன் மரம் ஒன்று சரிந்து வீழ்ந்ததன் காரணமாக, சில மணித்தியாலங்கள் போக்குவரத்து தடைப்பட்டன. இதனையடுத்து, வீதி போக்குவரத்து அதிகாரசபையினர், பிரதேசவாசிகள் மற்றும் பொலிஸார் இணைந்து, மரத்தை வெட்டி அகற்றியதைத் தொடர்ந்து போக்குவரத்து வழமைக்கு திரும்பின.
தொடர்ச்சியாக மழை பெய்து வருவதால், குறித்த வீதிகளில் மண்சரிவு எச்சரிக்கை ஏற்படும்
அபாயம் காணப்படுவதால், இந்த வீதிகளைப் பயன்படுத்தும் வாகன சாரதிகள் மிகவும்
அவதானமாக வாகனங்களை செலுத்துமாறு போக்குவரத்து பொலிஸார் கோரிக்கை
விடுத்துள்ளனர்.
கினிகத்தேனை, நோட்டன்பிரிட்ஜ், வட்டவளை மற்றும் ஹட்டன் ஆகிய பொலிஸ்
பிரிவுகளிலுள்ள பிரதேசங்களில் கடுமையாக காற்று வீசுவதால், மரங்கள் முறிந்து மின்கம்பங்கள் மீது விழுந்துள்ளதால், குறித்த பகுதிகளுக்கு அடிக்கடி மின் தடை ஏற்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .