R.Maheshwary / 2021 நவம்பர் 16 , மு.ப. 09:34 - 0 - {{hitsCtrl.values.hits}}
நவி
நான்கு மாதங்களுக்கு மேலாக, பல இலட்சம் ரூபாய் பணமோசடியில் ஈடுபட்டுவந்ததாகக் கூறப்படும் கம்பளை நகரில் பிரபல சுப்பர் மார்கட் ஒன்றின் பணியாளர்கள் ஐவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
கம்பளை- மலபார் வீதியில் அமைந்துள்ள குறித்த சுபர் மார்கட்டின் உரிமையாளர், கம்பளை பொலிஸ் நிலையத்தில் செய்யப்பட்ட முறைப்பாட்டுக்கு அமையவே, சந்தேகநபர்கள் ஐவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சன கூட்டமான நேரங்களில் பொருட்கள் கொள்வனவு செய்யவரும் பல வாடிக்கையாளர்களுக்கு ரசீதினை கொடுக்காது, பொருள்களை கொடுத்தே மேற்படி பணமோசடி செய்து வந்துள்ளதாக விசாரணைகளின் மூலம் தெரியவதுள்ளது
ரசீதுகள் கொடுக்காமை குறித்து வாடிக்கையாளர்களிடமிருந்து பல்வேறு சந்தர்ப்பங்களிலும் சுப்பர் மார்கட் உரிமையாளருக்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டினையடுத்து, பாதுகாப்பு கெமராக்களை சோதித்து பார்த்த போதே, மேற்படி பணமோசடி குறித்து தெரியவந்ததையடுத்து உரிமையாளரினால் பொலிஸ் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
கம்பளை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கபில பண்டாரவின் ஆலோசனைக்கமைய நேற்று (15) காலை கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களிடம் தொடர்ந்து, விசாரைணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
3 hours ago
8 hours ago
9 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
8 hours ago
9 hours ago
9 hours ago