2025 டிசெம்பர் 22, திங்கட்கிழமை

பலாங்கொடை நகர சபைத் தலைவர் மீண்டும் பதவியில் அமர்ந்தார்

Gavitha   / 2021 மார்ச் 11 , மு.ப. 11:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஏ.ஏ.எம்.பாயிஸ்

நிதி மோசடி தொடர்பான விசாரணைகள் முடியும் வரை பதவி இடைநிறுத்தம் செய்யப்பட்டிருந்த பலாங்கொடை நகர சபையின் முன்னாள் தலைவர் சமிக்க ஜயமினி வெவேகெதரவை, மீண்டும் அதே பதவியில் அமர்த்துமாறு, இரத்தினபுரி நீதவான் நீதிமன்ற நீதவான் உத்தரவிட்டதை அடுத்து, அச்சபையின் தலைவராக, மீண்டும் அவர் பொறுப்பெற்றுக்கொண்டார்.

பலாங்கொடை நகர சபைத் தலைவராகக் கடமையாற்றிய சமிக்க வெவேகெதரவின் நிர்வாகத்தில் குளறுபடிகள் இருப்பதாக செய்யப்பட்ட முறைப்பாட்டையடுத்து, விசாரணைகள் முடியும் வரை, தலைவர் பதவியில் இருந்து அவர் இடைநிறுத்தப்பட்டிருந்தார்.

இந்நிலையில், தனது பதவி இடைநிறுத்தப்பட்டமைக்கு எதிராக, இரத்தினபுரி நீதவான் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கை அடுத்து, அவரை பதவியில் மீண்டும் அமர்த்துமாறு, உத்தரவிடப்பட்டது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X