Kogilavani / 2021 ஜனவரி 24 , பி.ப. 03:36 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.குமார்
பலாங்கொடை நகரசபை தலைவரை இடைநிறுத்தியமை, பதில் தலைவரை நியமித்தமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து, பலாங்கொடை நகரில் நேற்று (24) காலை ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.
நகரசபை தலைவர் பதவியிலிருந்து இடைநிறுத்தப்பட்ட சாமிக ஜயமணி விமலசேனவின் ஆதரவாளர்களே, இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு கருத்துரைத்த பலாங்கொடை பிரதேச சபையின் எதிர்க்கட்சித் தலைவர் சஹான் போபிட்டிய, பலாங்கொடை நகரசபைத் தவிசாளரை எந்தவிதமான குற்றச்சாட்டுகளும் இன்றி மூன்று மாத காலத்துக்கு இடைநிறுத்தியமை தவறான முடிவாகும் என்று தெரிவித்தார்.
பலாங்கொடை நகரிலுள்ள மற்றுமோர் உள்ள10ராட்சி அமைப்பின் தலைவர்மீது, நிதிமோசடி குற்றச்சாட்டுகள் பல இருந்தபோதிலும் அதனை விசாரணை செய்யாது மக்களின் நம்பிக்கையை வென்ற நகரசபை தவிசாளரை நீக்குவதன் நியாயம் என்ன எனவும் கேள்வி எழுப்பினார்.
16 minute ago
26 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
16 minute ago
26 minute ago