சிவாணி ஸ்ரீ / 2020 மே 05 , மு.ப. 10:06 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொவிட்-19 தொற்றுக்கு உள்ளாகியிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுவோரை தனிமைப்படுத்துவதற்காக, பலாங்கொடை ரஜவக்க பிரதேசத்தில் அமைந்துள்ள திவிநெகும பயிற்சி நிலையத்தை, தனிமைபடுத்தல் மய்யமாக மாற்றுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக, சப்ரகமுவ மாகாண ஆளுநர் டிக்கிரி கொப்பேகடுவ தெரிவித்தார்.
பலாங்கொடை ரஜவக்க பிரதேசத்தில் அமைந்துள்ள திவிநெகும பயிற்சி நிலையத்தை தனிமைபடுத்தல் மய்யமாக அமைப்பது குறித்து ஆராய்வதற்கு, அப்பிரதேசத்துக்கு நேற்று (04), மாகாண ஆளுநர் உள்ளிட்ட அதிகாரிகள் விஜயமொன்றை மேற்கொண்டிருந்தனர்.
இரத்தினபுரி மாவட்டத்தில், அடிக்கடி வெள்ளம், மண்சரிவு அனர்த்தங்கள் ஏற்பட்டு வருகின்ற நிலையில், இரத்தினபுரி மாவட்டத்தில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளவர்களின் இடங்களிலும் அனர்த்தங்கள் ஏற்பட்டால், அவர்களையும் சாதாரண மக்களையும் ஒரே இடத்தில் பாதுகாப்பாக தங்கவைக்க முடியாது என்பதால், இதைக் கருத்தில் கொண்டே, இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேற்படி தனிமைப்படுத்தல் மய்யத்தில், ஒரே தடவையி் 135 பேரை தங்கவைக்க முடியும் என்றும் இவர்களுக்கான உணவு உள்ளிட்ட அத்தியாவசியத் தேவைகளைப் பெற்றுக்கொடுக்க முடியும் என்றும் இதன்போது தீர்மானம் எடுக்கப்பட்டது.
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago