2025 ஜூலை 10, வியாழக்கிழமை

பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து கொழும்பில் இன்று ஆர்ப்பாட்டம்

Kogilavani   / 2017 ஒக்டோபர் 13 , மு.ப. 06:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

மலையக மக்களின் காணி உரிமைக்கான மக்கள் இயக்கம், மலையக மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் நோக்கில், பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து, பெருந்தோட்ட அபிவிருத்தி அமைச்சுக்கு முன்பாக, இன்று பகல் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடவுள்ளதாக, அந்த இயக்கத்தின் இணைப்பாளர் எஸ்.டி.கணேசலிங்கம் தெரிவித்தார்.  

“மலையக மக்களின் உயிர் வாழும் உரிமைக்கான ஒரு மாற்றத்தை ஏற்படுத்துவோம்” எனும் தொனிப்பொருளில், இந்த ஆர்பாட்டம் முன்னெடுக்கப்படும் என்றும் அவர் கூறினார்.  

இது தொடர்பில் மேலும் கூறிய அவர்,   

“மலையக பெருந்தோட்ட மக்களின் காணி உரிமை, பெருந்தோட்டத்துறையிலுள்ள அரச சொத்துகளை விற்பனை செய்வதை நிறுத்துவது தொடர்பிலும், கொள்ளையடிக்கப்பட்ட ஊழியர் சேமலாப நிதி மற்றும் ஊழியர் நம்பிக்கை நிதி ஆகியவற்றை உடனே பெற்றுக்கொடுக்க வேண்டும் என்றும் ஆர்ப்பாட்டத்தின்போது வலியுறுத்தவுள்ளோம்.  

“மேலும், தேயிலை பயிர்ச் செய்கைக்கான ‘கிளைபொசெட்’ தடையை அகற்ற வேண்டும், தோட்டத் தொழிலாளர்களின் நாட்சம்பளத்தை 1,000 ரூபாயாக உயர்த்த வேண்டும் போன்ற கோரிக்கைகளும் இதன்போது முன்வைக்கப்படவுள்ளன” என்றார்.  

மேலும், “ஆர்ப்பாட்டத்துக்கு முன்பதாக, கொழும்பு கொள்ளுப்பிட்டியில் அமைந்துள்ள சீ.எம்.யு மண்டபத்தில், காலை 10 மணி முதல் 12 மணிவரை, இரண்டு மணிநேர மாநாடு நடத்தப்பட உள்ளது.  

“மாநாட்டில் முன்வைக்கப்படும் கோரிக்கைகளை வெளிக்கொணரும் வாசகங்கள் பொறிக்கப்பட்ட சுலோக அட்டைகளை ஏந்தியவாறு, பேரணியாகச்  சென்று, பெருந்தோட்ட அபிவிருத்தி அமைச்சுக்கு முன்பாக ஆர்ப்பாடத்தில் ஈடுபடவுள்ளோம்.   

“இதனைத் தொடர்ந்து, மாநாட்டில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள், மக்களிடம் பெறப்பட்ட கையெழுத்துத் தபால் அட்டைகள் மற்றும் கோரிக்கைகள் அடங்கிய மகஜர் என்பவற்றைப் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் நவீன் திசாநாயக்கவிடம் கையளிக்கவுள்ளோம்” என்றார். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .