Editorial / 2018 ஏப்ரல் 26 , பி.ப. 05:05 - 0 - {{hitsCtrl.values.hits}}
-சுஜிதா
தலவாக்கலை பாரதி மகா வித்தியாலயத்தின், பழைய மாணவர் சங்க கூட்டம், இம்மாதம் 30ஆம் திகதி திங்கட்கிழமை, பி.ப 2 மணிக்கு, பாடசாலையின் பிரதான மண்டபத்தில் இடம் பெறவுள்ளதாக, வித்தியாலய அதிபர் N.விஜயகுமாரன் தெரிவித்தார்.
இக் கூட்டத்தில் இவ் வருடத்துக்கான பல முக்கிய தீர்மானங்கள் எடுக்கப்படவிருப்பதாகவும், குறிப்பாக 2018ஆம் ஆண்டிற்கான புதிய நிர்வாகக் குழு உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இவ்வருடத்துக்கான பாடசாலை கல்வி மற்றும் இணை பாடவிதான அபிவிருத்தி தொடர்பாக, பல முக்கிய தீர்மானங்கள் எடுக்கப்படவுள்ளதுடன், இக்கூட்டத்துக்கு பாரதி மகா வித்தியாலயத்தில் 2016ஆம் ஆண்டுக்கு முன் கல்வி கற்று வெளியேறிய சகல மாணவர்களும் கலந்து கொள்ள முடியும் என்றும் அதிபர் மேலும் தெரிவித்துள்ளார்.
25 minute ago
37 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
25 minute ago
37 minute ago