Kogilavani / 2015 செப்டெம்பர் 10 , மு.ப. 08:02 - 0 - {{hitsCtrl.values.hits}}
கடந்த பெப்ரவரி 12 ஆம் திகதி, தனியார் பஸ்ஸொன்றிலிருந்து தூக்கிவீசப்பட்டு, ஆபத்தான நிலையில் கண்டி வைத்தியசாலையில் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த பெண், சிகிச்சை பலனின்றி நேற்று வியாழக்கிழமை காலை 10 மணியளவில் உயிரிழந்தார். சந்திரமாலா (28 வயது) என்ற பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இவர், கடந்த பெப்ரவரி மாதம் 12ஆம் திகதி மாதாந்த கிளினிக்குக்கு சென்றுவிட்டு வீடு திரும்புவதற்காக, கண்டியிலிருந்து நாவலப்பிட்டி நோக்கி சென்றுக்கொண்டிருந்த பஸ்ஸில் ஏறியுள்ளார். கர்ப்பிணி என்று தெரிந்தும் யாரும் இருக்கைகளை கொடுக்க முன்வராததால் இப்பெண் பஸ்ஸின் மிதிப்பலகைக்கு அருகில் நின்றவாறு பயணித்துள்ளார். இந்நிலையில், கம்பளை- நாவலப்பிட்டி வீதி, வளைவில் வைத்து பஸ்ஸிலிருந்து அவர் வெளியே வீசப்பட்டுள்ளார்.
வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர், குறித்த கர்ப்பிணிக்கு சச்சிரசிகிச்சையினூடாக குழந்தை வெளியே எடுக்கப்பட்டிருந்தது.
இப்பெண்ணின் தலைப்பகுதியில் பலமாக அடிப்பட்டிருந்தமையால் தொடர்ந்து அவர், தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையிலே நேற்று (10) உயிரிழந்துள்ளார்.
25 minute ago
25 minute ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
25 minute ago
25 minute ago
1 hours ago
1 hours ago