Janu / 2024 பெப்ரவரி 18 , பி.ப. 03:40 - 0 - {{hitsCtrl.values.hits}}
கேகாலை - புலத்கொஹுபிட்டிய வீதி, உதுகொட பிராந்திய வைத்தியசாலைக்கு அருகில் ஞாயிற்றுக்கிழமை (18) காலை இடம்பெற்ற விபத்தில் மூவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது .
புலத்கொஹுபிட்டிய நோக்கி பயணித்துக்கொண்டிருந்த இ . போ . சபைக்கு சொந்தமான பேருந்தொன்று எதிரே வந்த முச்சக்கரவண்டியுடன் மோதியே இவ் விபத்து ஏற்பட்டுள்ளதாக புலத்கொஹுபிட்டிய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும் இவ் விபத்தின் போது முச்சக்கரவண்டியில் பயணித்த , யடிதாரிய பிரதேசத்தை சேர்ந்த மூன்று இளைஞர்கள் படுகாயமடைந்து கேகாலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை புலத்கொஹுபிட்டிய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


31 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
31 minute ago
1 hours ago