R.Maheshwary / 2022 ஓகஸ்ட் 09 , மு.ப. 09:35 - 0 - {{hitsCtrl.values.hits}}
சுதத்.எச்.எம்.ஹேவா
பஸ் கட்டணங்களை குறைக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்திருந்தாலும் ஹட்டனிலிருந்து பல பகுதிகளுக்கு சேவையில் ஈடுபடும் பல தனியார் பஸ்கள் கட்டண குறைப்பை முன்னெடுக்காமல் அதிகரித்த கட்டணத்தையே அறவிடுவதாக பயணிகள் தெரிவிக்கின்றனர்.
பஸ் கட்டணங்கள் அதிகரிக்கபடும் போது உடனடியாக பஸ் கட்டணங்களை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கும் தனியார் பஸ்கள், கட்டணங்களை குறைக்கும் போது பயணிகளிடம் கட்டண குறைப்பை முன்னெடுப்பதில்லை என்றும் குற்றஞ்சுமத்துகின்றனர்.
பல பஸ்களின் நடத்துனர்கள் அதிகரித்த கட்டணத்தையே தற்போதும் அறவிடுவதுடன், பல நடத்துனர்கள் மிகுதி பணம் இல்லையென தெரிவித்து, அதிக கட்டணத்தை அறிவிடுவதாகவும் தெரிவிக்கின்றனர்.
இதற்கமைய ஹட்டனிலிருந்து தலவாக்கலை, மஸ்கெலியா, பொகவந்தலாவை, போடைஸ், சாஞ்சிமலை, சாமிமலை ஆகிய வீதிகளில் சேவையில் ஈடுபடும் தனியார் பஸ்களே கட்டணங்களை குறைக்காமல் சேவையில் ஈடுபடுவதாகவும் தெரிவிக்கின்றனர்.
22 Mar 2026
22 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
22 Mar 2026
22 Mar 2026