2026 ஜனவரி 19, திங்கட்கிழமை

பஸ் கட்டணங்கள் காட்சிப்படுத்தாமையால் பயணிகள் அசௌகரியம்

R.Maheshwary   / 2022 ஜனவரி 13 , மு.ப. 08:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

 என்.ஆராச்சி

கேகாலையை அண்மித்த பகுதிகளில் சேவைகளில் ஈடுபடும் தனியார் பஸ்களில் புதிய பஸ் திருத்தக் கட்டணங்கள் காட்சிப்படுத்தாமையால் பயணிகள் அசெகளரியங்களுக்கு முகம்கொடுத்துள்ளனர்.

இதனால் பஸ் நடத்துனர்களுக்கும் பயணிகளுக்கும் இடையில் கருத்து முரண்பாடுகள் ஏற்படுவதாகவும் சுட்டிக்காட்டப்படுகின்றது.

பஸ் திருத்த கட்டணங்கள் தொடர்பில் உரிய முறையில் அறிவிப்பு இன்மையால் சில நடத்துனர்கள் கூறும் கட்டணத்தையே பயணிகள் செலுத்தும் நிலையே ஏற்பட்டுள்ளது.

அத்துடன் குறித்த பகுதியில் சேவையில் ஈடுபடும் பெரும்பாலான தனியார் பஸ்களில் பயண டிக்கட்டுகள் வழங்கப்படுவதில்லை என்றும் பயணிகள் தெரிவிக்கின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X