Editorial / 2020 ஜனவரி 31 , மு.ப. 11:13 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஏ.ஏ.எம்.பாயிஸ்
இரத்தினபுரி பிரதான பஸ் நிலையத்தின், இலக்கம் 3 பயணிகள் பஸ் தரிப்பு
மண்டபம் அகற்றப்பட்டுள்ளதால், அவ்விடத்தில், பஸ்ஸூக்காகக் காத்திருக்கும் பயணிகள், பல்வேறு சிரமங்களுக்கு முகங்கொடுத்து வருகின்றனர்.
மழை, கடும்வெயில் காலங்களில், இலக்கம் 1,2 ஆம் இலக்க மண்டபங்களுக்கு அனைத்துப் பயணிகளும் வருதால், சன நெரிசல் ஏற்படுவதாகவும் இதனால் பாரிய அசௌகரியங்களை எதிர்கொள்வதாகவு் தெரிவிக்கப்படுகிறது.
பயணிகள் மண்டபம் அகற்றப்பட்டு ஆறு மாதங்கள் கடந்துள்ள போதிலும் பயணிகள் எதிர்கொள்ளும் அசௌகரியங்களுக்கு, இதுவரை தீர்வு பெற்றுக்கொடுக்கப்படவில்லை என்றுச் சுட்டிக்காட்டப்படுகிறது
எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இது தொடர்பில் கவனஞ்செலுத்த வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை விடுக்கின்றனர்.
19 minute ago
4 hours ago
4 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
19 minute ago
4 hours ago
4 hours ago
5 hours ago