Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Freelancer / 2023 பெப்ரவரி 20 , பி.ப. 12:37 - 0 - {{hitsCtrl.values.hits}}
நோர்டன்பிரிஜ் பஸ் விபத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 3ஆக அதிகரித்துள்ளது.
விபத்தில் பின்னர் பஸ்ஸிற்கு கீழ் சிக்குண்டு, உயிரிழந்த இளைஞன் ஒருவனின் சடலத்தை லக்ஷபான இராணுவ முகாம் அதிகாரிகள் மீண்டும் கண்டெடுத்துள்ளனர்.
33 வயதான இளைஞன் ஒருவனின் சடலமே இவ்வாறு கண்டெடுக்கப்பட்டுள்ளது.
சிவனொளிபாதமலை யாத்திரை சென்று வீடு திரும்பிக் கொண்டிருந்தவர்கள் பயணித்த பஸ், நோர்டன் பிரிஜ் பகுதியில் சுமார் 100 அடி பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் நேற்றைய தினம் இரண்டு பெண்கள் உயிரிழந்திருந்ததுடன், 26 பேர் காயமடைந்திருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
விபத்தின் போது ஒருவர் காணாமல் போயுள்ளமை தொடர்பில் தகவல் பதிவாகியிருந்தது.
இதையடுத்து, இன்று காலை முன்னெடுக்கப்பட்ட தேடுதலின் போதே, இளைஞன் ஒருவன் சடலத்தை இராணுவத்தினர் கண்டெடுத்துள்ளனர். R
38 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
38 minute ago
2 hours ago