Editorial / 2019 ஜூலை 12 , பி.ப. 03:47 - 0 - {{hitsCtrl.values.hits}}
உமாமகேஸ்வரி
எம்பிலிப்பிட்டியவிலிருந்து கொழும்பு நோக்கிச் சென்ற பஸ்ஸில் பயணித்த மாணவி ஒருவர், பஸ்ஸிலிருந்து விழுந்து படுகாயமடைந்த நிலையில், காவத்தை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பெல்மதுளை பகுதியிலுள்ள பிரபல பாடசாலையொன்றின் மாணவி ஒருவரே, இவ்வாறு இன்று(12) பிற்பகல் 2.00 மணியளவில் இவ்வாறு விழுந்து படுகாயமடைந்துள்ளார் என்று, பெல்மதுளைப் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இவர் நாரங்கொடை பகுதியைச் சேர்ந்தவர் என்று தெரியவருகிறது.
பாடசாலை முடிந்து வீடு செல்லும் பொருட்டு எம்பிலிபிட்டியவிலிருந்து கொழும்பு நோக்கி செல்லும் தனியார் பஸ்ஸில், இரு மாணவிகள் எறியுள்ளனர்.
தாம் இறங்கும் இடமான கனேகம எனுமிடத்தில் பஸ் நிறுத்தப்பட்ட போது ஒரு மாணவி இறங்கியுள்ளார். மற்ற மாணவி இறங்குவதற்கு முன்னர் பஸ்ஸை பஸ் சாரதி எடுத்ததால் மற்ற மாணவி பஸ்ஸிலிருந்து பாய்ந்துள்ளளர்.
இதனால் அம்மாணவி படுகாயமடைந்து, பெல்மதுளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர், மேலதிக சகிச்சைக்காக காவத்தை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.
பஸ்ஸின் சாரதி, நடத்துநரை கைதுசெய்துள்ள பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
1 hours ago
2 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
4 hours ago