2025 ஜூலை 17, வியாழக்கிழமை

பஸ்ஸில் மோதி ஒருவர் பலி

Janu   / 2023 ஜூன் 27 , மு.ப. 10:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

செ.தி.பெருமாள்

காட்டு மஸ்கெலியா தோட்டத்தை சேர்ந்த70 வயதுடைய  ஒருவர்  அவிஸ்ஸாவளை அரச பேருந்து நிலையத்திற்கு உரித்தான பேருந்தில் மோதி  பலியான சம்பவம் ஒன்று திங்கட்கிழமை (26) இரவு இடம்பெற்றுள்ளது.

இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு மஸ்கெலியா பொலிஸார்  சென்று வீதியில் கிடந்தக குறிப்பிட்ட  நபரை மஸ்கெலியா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்க பட்டபோது அவர் உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

அதனைத் தொடர்ந்து பேருந்தின் சாரதி கைது செய்யப்பட்டதுடன் பேருந்தும் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும்   சந்தேக நபரை ஹட்டன் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்த உள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X