Mayu / 2024 மே 16 , மு.ப. 10:23 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேரூந்து சாரதியொருவர் தான் செலுத்தி சென்ற பேரூந்தில் மாரடைப்பு ஏற்பட்ட நிலையில் உயிரிழந்த சம்பவம் லிந்துலை பொலிஸ் பகுதியில் புதன்கிழமை(15) பதிவாகியுள்ளதாக லிந்துலை பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவத்தில் நுவரெலியா பிரதான பஸ்தரிப்பு நிலையத்திலிருந்து மாலை 03.10 மணியலவில் புறப்பட்டு தலவாக்கலை ஊடாக பத்தனை சந்தி வழியாக நாவலப்பிட்டி நோக்கி பயணிக்கும் பேரூந்தின் சாரதியே இவ்வாறு திடீர் மாரடைப்புக்கு உள்ளாகி உயிரிழந்ததாக ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அத்துடன் சம்பவத்தில் உயிரிழந்த சாரதி இ.போ.சபைக்கு சொந்தமான நாவலப்பிட்டி டிப்போவில் பணியாற்றும் இரண்டு பிள்ளைகளில் தந்தையான ஆரத்தனகே (வயது 41) என்பவராவார்.
இதையடுத்து சாரதியின் உடல் பிரேத பரிசோதணைக்காக நுவரெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக லிந்துலை பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
சுஜிதா, கெளசல்யா,ஆ.ரமேஸ்,


3 hours ago
21 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
21 Dec 2025