2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை

பாடசாலை அபிவிருத்தி தொடர்பில் கலந்துரையாடல்

Kogilavani   / 2017 செப்டெம்பர் 11 , பி.ப. 12:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

மொஹொமட் ஆஸிக்

கண்டி சித்திலெப்பை மஹா வித்தியாலயத்தின் பாடசாலை அபிவிருத்திக் குழுவினர், நகரத்திட்டமிடல் மற்றும் நீர்வழங்கல் அமைச்சரும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும்   ரவூப் ஹக்கீமை, கட்சியின் கண்டி அலுவலகத்தில், ஞாயிற்றுக்கிழமை சந்தித்துக் கலந்துரையாடினார்.

இதன்போது, பாடசாலையின் பௌதீக வளப்பற்றாக்குறைகள் தொடர்பாக விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.  

இப்பாடசாலை,  மாகாண சபையின்  நிர்வாகத்தின் கீழ் வருவதால், எதிர்வரும் 14ஆம் திகதி,  பாடசாலை அபிவிருத்திக் குழுவுடன் மாகாணசபை முதலமைச்சரை சந்தித்து,  இதற்கானத் தீர்வை பெற்றுத் தருவதாக, அமைச்சர் ரவூப் ஹக்கீம் இதன்போது உறுதியளித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .